எலி பிடிக்கப்போனவன் பாம்பு பொந்துக்குள்ள கையை விட்ட கதையாகிப் போச்சு நடிகை சோனம்கபூருக்கு.!
நடிகை தனுஸ்ரீ சொன்ன பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்காக அவரை நடிகைகள் பாராட்டி வருகிறார்கள். அவர்களில் கங்கனா ரனாவத் .சோனம் இருவரும் முக்கியமானவர்கள்.
பாலியல் வன்முறை பற்றி பேசிய கங்கனா தன்னுடைய அவஸ்தை பற்றியும் சொல்லி இருந்தார். டைரக்டர் விகாஸ் தன்னை” ஹக் பண்ணும் போதெல்லாம் இறுகத்தழுவி காதோரமாக முகம் புதைத்து ‘உனது கூந்தல் மணம் என்னை வசீகரிக்கிறது’ என்பதாக சொல்வார் காமாந்தகன்!”என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.
இப்படியெல்லாம் சொல்கிறவரை “நம்ப முடியுமா? என்கிற ரீதியில் சோனம் கருத்து சொன்னால் அந்த கங்கனா சும்மா விடுவாரா?
அண்மையில் பெங்களூருவில் கூடிய நடிகைகள் மத்தியில் பேசிய சோனம் “கங்கனா ஏதோ சொல்கிறார்,அதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.ஏது உண்மை என தெரியவில்லை. அவர் அப்படி சொன்னது உண்மை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்”என்பதாக பேசி இருக்கிறார்.
கங்கனாவின் காதுக்கு போகாமல் இருக்குமா?
“யாரடி நீ எனக்கு சமமா நீ? மோதிப் பார்க்கலாம். வாரீயா” என்கிற ரேஞ்சுக்கு கோபமாகி விட்டார் கங்கனா!
“நீ யார் என்னை ஜட்ஜ் பண்ண? உனக்கு அந்த ‘லைசன்சை’ யார் கொடுத்தது? நீ என்ன பெரிய நடிகையா, பெரிய ஸ்பீக்கரா? எனக்கு நேர்ந்த பாலியல் வக்கிரத்தை சொன்னால் நம்ப கஷ்டமா இருக்கா? என்னை அலசிப் பார்க்க எந்த சினிமாக்காரன் உனக்கு அனுமதி கொடுத்தான். சொல்லு! அவர்களை உடைத்து நொறுக்குகிறேன்” என கர்ஜித்திருக்கிறார்.
“அவள் ஒரு ட்ரபுள் மேக்கர்” என்பதாக சொல்கிறார் சோனம்.
பாலியல் வன்முறை இருக்கிறது என்பதை சொன்னதற்காக இரு நடிகைகளை மோத விட்ட அந்த ராஜவிசுவாசி யாரோ?