எத்தனை நாட்களுக்கு பெரிய மனிதன் என்கிற கிரீடம் தாங்கி நிற்பீர்கள்?
எறக்கி வையுங்கள்….இல்லையேல் இழிவு வந்து சேரும் என்கிற நிலைக்கு பெரிய மனிதர்கள் மாட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
“பாடல் காட்சிகள் எடுத்து முடிந்த பின்னரும் நானா படேகர் எனது கரத்தை இறுக்கமாகப் பற்றி இழுத்து அணைத்து இப்படித்தான் ஆடி இருக்க வேண்டும் “என்று கடுப்புடன் சொன்னார் என்பதுடன் மேலும் பல பாலியல் வன்முறை சார்ந்த புகார்களை அடுக்கி இருந்தவர் தனு ஸ்ரீ .
போலீசிலும் புகார் செய்து விட்டார்.
இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களிடம் விரிவாகப் பேச இருப்பதாக அவர்களை அழைத்திருந்தார். என்ன நேர்ந்ததோ, நானாவின் மகன் மல்கர் பிரஸ் மீட் கான்சல் செய்யப்பட்டதாக அறிவித்து விட்டார். “பொய் சொல்வதெல்லாம் பொய்” என்கிறார் நானா.