சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் போகலாம் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு தீர்ப்பினை வழங்கி இருக்கிறது.
இதற்கு சபரிமலை தேவஸ்வம் போர்டு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது..சில அமைப்புகளும் ஆன்மீகம் சார்ந்த கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. உச்ச நீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது.
ஆனால் சின்ன சந்தேகம்.1986- ல் வெளிவந்திருந்த படம் நம்பினார் கெடுவதில்லை.கேப்டன் விஜயகாந்த் ,இளைய திலகம் பிரபு கதாநாயகி ஜெய ஸ்ரீ,சுதா சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முன்னர் எடுத்த காட்சிகளை இடையிடையில் சேர்த்திருப்பார்கள்.அதில் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் இரு முடி தாங்கி நடந்து செல்லும் படமும் அடக்கம்.
ஆனால் 18 ம் படியின் முதல் படி அருகில் உட்கார்ந்தும் ,நின்றும் பாடி ஜெய ஸ்ரீ உருகுவார். அந்த படப்பிடிப்புக்கு தேவஸ்வம் போர்டு வாடகையாக 7500 ரூபாய் பெற்றிருக்கிறது. ஜெய ஸ்ரீ யை எந்த ஆச்சாரம் கருவறை வரை செல்ல அனுமதித்திருக்கிறது?
இது எப்படி நடந்தது? கடுமையாக தீர்ப்பை எதிர்க்கும் முன்னாள் நடிகை ஸ்ரீ ரஞ்சனி என்ன சொல்கிறார்?