பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வாரங்களுக்கு முன் திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அடையாரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்த தை தொடர்ந்து அவரது உடல்நிலை சீரானது. இசையமைப்பாளர் இளையராஜா உள்பட பலரும் அவரை நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர்.இந்நிலையில் எம்.எஸ்.விஸ்வநாதனை வீட்டுக்கு அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால், உடல்நிலை திடீரென மோசமடைந்தது. நினைவுகளை முற்றிலும் இழந்தார். இதையடுத்து எம்.எஸ். விஸ்வநாதனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனாலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார். தொடர்ந்து அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.திரையுலகினரும், குடும்பத்தினரும் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்து வருகிறார்கள். மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் , (எம்எஸ்வி), பிறப்பு: 24 சூன் 1928) இந்தியாவின் பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி)[1]. விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ் திரைப்படங்களில் அதிகம் பணிபுரிந்தாலும் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்