
என்னய்யா நீதி நியாயம் நடக்கிது நாட்டில!
பத்மாவத் படம் வந்த போது நாட்டுக்கே பேரபாயம் வந்தது போல குதித்தவர்களில் பி.ஜே.பி.யின் மூத்த தலைவர் சுராபால் அமு. படத்துக்கு நாட்டு மக்கள் அமோக வரவேற்பு அளித்து பாக்ஸ் ஆபீஸ் பொட்டிக்குள் தள்ளிவிட்டார்கள். இதனால் கடுப்பான பி.ஜே.பி. தலைவர் சுராமல் அமு “அந்த படத்தின் நடிகை தீபிகா படுகோனே, இயக்குநர் சஞ்சை லீலா பன்சாலி ஆகிய இருவரின் தலைகளை கொண்டு வருவோருக்கு 10 கோடி பரிசு தருவதாக “அறிவித்தார்.
இதனால் பொங்கிவிட்ட பிஜேபி தலைமை அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே தூக்கி விட்டதாக அறிவித்தது. அடடா..என்னே கட்டுப்பாடு என சிலாகித்து முடிவதற்குள் தலையில் கங்கா ஜலத்தை தெளித்து பாவம் எல்லாம் போய்விட்டதாக சொல்லி பிஜேபி மறுபடியும் சேர்த்துக் கொண்டு விட்டது.
அடடா இதுதான் கண்ணியம்.!












