‘பாலென்ற பருவமே ;
பழமென்ற உருவமே;
சேலென்ற கண்களே வா !’
பாடத் தோன்றுகிறதா…எல்லாப்புகழும் கவிஞரய்யா, உங்களுக்கேதான்.!
மலைகா அரோரா. பிள்ளை இருக்கிறான். விவாகரத்து வாங்கியாகிவிட்டது. நோ வில்லங்கம். நட்பு வட்டம் பெரிதாகத் தானே செய்யும்.
ஒரு நேரத்தில் ‘சைய்யா சைய்யா’ பாடல் இம்சித்திருக்குமே , ஆட்டமும் பாடலும் அந்த இந்திப் படத்தை உச்சிக்குக் கொண்டு சென்றது என்றால் அதற்கு காரணம் மலைகா.!
தயாரிப்பாளர், நடிகை, நாட்டியராணி, வீடியோ ஜாக்கி என பன்முகம் கொண்டிருந்தாலும் நடிப்பு ஆசை விட்ட பாடில்லை. தற்போது ஆடை வடிவமைப்பில் அழகிகள் என்கிற நிகழ்ச்சியில் ஜட்ஜாக நியமித்திருக்கிறார்கள்.
எனக்கொரு சினிமா வாய்ப்பு வராதா என்கிற ஆசையில் அள்ளிப் போட்டுக்கொண்ட படங்கள்தான் நீங்கள் பார்ப்பது.!