“சொல்லும் வகைதான் புரியவில்லை,அதை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை” என பல நடிகைகள் புலம்பித் தவிக்கிறார்கள்..
நேற்றுவரை மவுன விரதம் அனுஷ்டித்த ‘மீ டூ’ ஹாஸ்டக் இன்று பாலிவுட், கோலிவுட் ஆகியவை பற்றி எரிவதற்கு காரணமே தனு ஸ்ரீ தத்தா.
அணை உடைத்த வெள்ளமாக பாலியல் புகார்கள் பாய்கின்றன. விகாஸ், சேத்தன் பகத், குர்ஷிம்ரான், கைலாஷ் கேர்,ரஜத்கபூர், அலோக் ஆகியோர் பெயர் ‘வாங்கி’ இருக்கும் பாலிவுட் பிரபலங்கள்.
“சிலரின் விருப்பத்துக்கு இணங்காததால் மணிக்கணக்கில் காக்கவைக்கப்பட்டேன். சில நாட்களில் பதினெட்டு மணி நேரம் வேலை வாங்கப்பட்டேன் “என்கிறார் பாலிவுட் நடிகை அமைரா தஸ்தூர்.இவர் தமிழில் ‘அனேகன்’ படத்தில் நடித்தவர்.
“வாய்ப்புத் தருவதற்காக படுக்கைக்கு அழைத்தார்களா?”
“அத்தகைய அனுபவம் ஏற்படவில்லை.ஆனால் பாலிவுட், அண்ட் சவுத் இந்தியா இரண்டிலும் பாலியல் ரீதியான தொல்லைகளை அனுபவித்திருக்கிறேன்.”
“அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டியதுதானே?”
“அத்தகையவர்களின் பெயர்களை சொல்கிற ‘கட்ஸ்’ எனக்கு இல்லை. அவர்கள் மிகவும் உயரத்தில் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு நாள் அவர்களை அம்பலப்படுத்துவேன். அந்த நாள் வரும் வரை நான் கைகாட்ட விரும்பவில்லை. அவர்களை ‘கர்மா’ சும்மா விடாது.
பாடல் காட்சியின் போது ஒரு நடிகர் என் காதுகளில் உன் கூட நடிப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என கிசுகிசுத்தார். நான் உடனே டைரக்டரிடம் புகார் செய்தேன். பலன் இல்லை. அதன் பிறகு வேறு வகையான தொல்லைகள் .மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டேன். சில நாட்களில் பதினெட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியதாகிவிட்டது.” என்கிறார் அமைரா தஸ்தூர்.