எங்கேஜ்மென்ட் நடந்திருந்தாலும் மணமேடையில் தாலி கட்டினால்தான் அவர்கள் புருஷன்-பொண்டாட்டி. அது நடக்காதவரை இடையில் எத்தனையோ மாற்றங்கள்…நடக்கலாம். ! வாழ்க்கைக்கே அப்படி என்றால் ஒரு தொழிலில்? எதுக்கு இவ்வளவு பில்டப்?
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் முக்கிய பொறுப்பில் இருப்பவர். அவரது படத்தில் இருந்து சுட்ட காட்சிகளை வைத்துப் படம் பண்ணிக்கொண்டு ஒரு இயக்குநர் கோடிகளில் வாழ்ந்தால் தயாரிப்பாளர் விரல் சப்புவாரா, என்ன?
எங்கே தட்டினால் கீழே விழுந்து மூஞ்சி உடையுமோ அந்த மையப் புள்ளியில் அழுத்தம் கொடுக்க ஒரு இயக்குநரின் கனவு கலைந்திருக்கிறது..சுளையாக மூன்று கோடி ரூபாய் கொடுத்தால் அடுத்த படத்தை அந்த இயக்குநர் தொடலாம் என கதிர் அடிப்பது மாதிரி தயாரிப்பாளர் சங்கப் பிரமுகர் அடிக்க பாவம் இயக்குநர் என்ன செய்ய முடியும். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இனி விஷயத்துக்கு வருவோம்.
சர்க்கார் படத்துக்கு அடுத்த படம் இயக்குநர் அட்லியின் படம்தான். ஏ.ஜி.எஸ். என்டர்டயின்மென்ட் தயாரிக்கும் அந்த படத்தில் இளையதளபதி விஜய் நடிக்கிறார் என செய்திகள் வெளியாகியபோது எவரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
ஆனால் திடீரென ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ. அர்ச்சனா கல்பாத்தி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
‘விஜய் சாரின் அடுத்த படத்தை நாங்கள் தயாரிப்பதாக ஒரு ‘பொய்யான’ விஷயம் வெளியாகி இருக்கிறது. விஜய் சாரை வைத்துப் படம் பண்ணுவது எங்கள் கனவு.எப்போதுமே அதுதான் எங்கள் விருப்பமாக இருக்கிறது.எனவே விரைவில் அப்படியொரு விஷயம் நடக்கும் என எதிர் பார்க்கலாம்”
அப்படியானால் அட்லியின் கனவு?
பொறுத்திருந்து பார்க்கலாம்.