இன்றைய சினிமாவின் ஹாட் டாபிக் பாலியல் வன்முறைதான்!
‘மீ டூ ‘வைத் திறந்தால், அல்லது சிலரின் டிவிட்டரை பார்த்தால் தலையைச்சுற்றும் அளவுக்கு செக்ஸ் புகார்கள்தான்!
இத்தனை நாளும் புதை குழியில் கிடந்ததால் என்னவோ துர்நாற்றம் அதிகமாகவே இருக்கிறது. நாம் நேசித்தவர்களின் பெயர்களும் அதில் இருப்பதைப் பார்க்கிறபோது அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
செக்கச் சிவந்த வானம் நடிகை அதிதி.போல்டானவர்.
“பாலியல் வன்முறை புதிதாக வரக்கூடிய நடிகைகளுக்கு மட்டுமே இருக்கிறதா, வாரிசுகளின் பிள்ளைகளுக்கு இருப்பதில்லையா?”என கேட்டால்….
பட்டென பதில் சொல்லிவிட முடியுமா என்ன…..!
“அப்படி என்னால் சொல்ல முடியாது. என்னைப் பற்றிய கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்ல முடியும்.
புதிதாக இந்த துறைக்கு வருகிறவர்கள் கொள்கை ,கோட்பாடுகளுடன் வாழலாம் என நினைத்தால் அது கஷ்டம்.ஆனால் வாழ முடியும்.
அட்ஜஸ் செய்ய மறுத்தால் வாய்ப்புகள் கம்மிதான்! நான் நடிக்க வந்த புதிதில் படுக்கையை பகிர்ந்து கொள்ள சம்மதிக்காததால் 3 படங்களை இழந்தேன்.
ஆனால் கண்ணியம் கவுரவமுடன் வாழ முடியும். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இடம் சினிமா என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இங்கு எல்லோரும் கெட்டவர்கள் இல்லை.” என்கிறார் அதிதி