கேப்டன் வீட்டில் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை அதுவுமா வீட்டில் இருந்த பசு மாடுகள் களவு போகலாமா? ஏதோ சோதனை வரப்போகிறது என்கிற அச்சம்.!
விஜயகாந்த் வீடு சாலிகிராமம் கண்ணம்மாள் வீதியில் இருக்கிறது. காட்டுப்பாக்கத்திலும் வீடு இருக்கிறது. அந்த வீட்டில் பசுக்கள் வளர்க்கப் படுகின்றன. அந்த வீட்டில் இருந்த இரண்டு மாடுகளை எவனோ ஓட்டிக்கொண்டு போய்விட்டான். இதனால் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள்.