எல்லாம் வல்ல இறைவனே! இப்படியும் சில மன்னிக்க ,பல மட்டிகளை உருவாகியது ‘மீ டூ ‘ சம்பவங்களுக்காகத்தானா…. நாசமாகப் போக.!
ரேணுகா ஷஹானே…பிரபலமான நடிகைதான். அம்மா நடிகையாக இருந்தாலும் அவர் இப்போது பிரபலம்தான்!
நொய்டாவில் பிரபலமான ஹோட்டலில் தங்கி இருந்தபோது ஹோட்டல் வெயிட்டர் ….. இனி அவரே சொல்வார் கேட்போம்.!
“எனது அறைக்கு வந்தான். வெறி பிடித்த ரசிகன் என்றான். சந்தோசம் என்றேன் .மறு வினாடியே அவனது ஆடைகளை களைந்து விட்டு என் முன்பாகவே சுய இன்பம் அனுபவிக்க ஆரம்பித்து விட்டான். உடனே அறையிலிருந்து வெளியேறா விட்டால் நிர்வாகத்தில் சொல்லிவிடுவேன் என்று வெளியேற்றி விட்டேன். அதன் பிறகு எனது பெண் உதவியாளரை என்னுடனேயே தங்க வைத்துக் கொண்டேன்” என்கிறான் . கொடுமையான அனுபவம்தான் ரேணுகாஜி!