கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் இந்த மூன்று திரை உலகிலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான புகார்களை பாடகி சின்மயிக்குத்தான் அனுப்பிவருகிறார்கள்.
அப்படி வந்த ஒரு புகாரில் இசை அமைப்பாளரும் பாடகருமான ரகுதீட்சித் மீதான ஒரு புகாரும் ஒன்று.
ரிக்கார்டிங் தியேட்டருக்கு வந்திருந்த பாடகர் தீட்சித் தன்னிடம் அவரது மனைவியை தவறாகப் பேசி விட்டு தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார் என ஒரு பெண் கூறியதாக சின்மயி சொல்லி யிருந்தார். அந்தப் பெண் யார் எவர் என்ன செய்கிறார் என்கிற விவரமெல்லாம் கொடுக்கவில்லை.
ஆனால் அந்த பாடகர் உடனே இப்படி பதிவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டார்.
“என் மீது அனாமதேய குற்றச்சாட்டு பதிவிடப்பட்டிருந்தது. எனது பக்கம் தவறு எதுவும் நடந்திருந்தால் மன்னிக்கவேண்டுகிறேன். நான் எப்பவுமே உண்மையுடன் நடப்பவன்”என்று சொல்லி இருக்கிறார்.
மான அவமானங்களுக்கு பயந்தவர் போலும்!