அரசியலுக்கு இப்படிப்பட்டவர்கள்தான் வரவேண்டும் என்கிற நியதி, விதிகள் எல்லாம் இருக்கா என்ன? அவரோட தலைவிதி அரசியல்தான் என்றால் யார் தடை செய்ய முடியும்?
மீ டூ வுக்கு கடுமையாக சப்போர்ட் செய்கிறவர்களில் அமலா பாலும் ஒருவர். “எனக்கு ஏற்பட்ட தொல்லைக்கு முதலில் மணி கட்டியவள் நான்தான். பாலியல் வன்முறை எல்லாத் துறைகளிலும் இருக்கு.அதை ஒடுக்காமல் விடக்கூடாது. எனது ஆதரவு மீ டூ வுக்கு உண்டு” என்கிறார் அமலாபால்.
“அப்ப அரசியலுக்கும் வந்திருவீங்களா?”
“ஏன் வரக்கூடாதா? காலமும் சூழ்நிலையும் தேவையும் சேர்ந்து வந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்”
“இமயமலைக்குப் போனதின் ரகசியம் இதுதானா?”
“நாட்டில தனியா நடமாட பயமா இருக்கு. ஆனால் இமயமலையில் அந்த பயம் கிடையாது. இயற்கை நமக்கு எந்த கெடுதியும் பண்ணாது. அங்கே போனால் புத்துணர்வு கிடைக்கிறது.அது போதுமே” என்கிறார் அமலாபால்.