இயக்குநர் லிங்குசாமிக்கு உற்சாகம் கிளம்பிவிட்டால் அதை உடனே பகிர்ந்து கொள்வதற்கு தயங்க மாட்டார். அன்று சண்டக்கோழி 2 பட பத்திரிகையாளர் சந்திப்பும் அப்படித்தான்!
“சண்டக்கோழி 3 படத்தின் வேலைகளை அடுத்த 3 மாதங்களில் இதே யூனிட்டை வைத்துத் தொடங்கியாக வேண்டும். கதாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அதற்கான வேலைகளில் இறங்கிவிட வேண்டும். அய்யா ராஜ்கிரண் ,விஷால் உள்ளிட்டவர்களிடம் கால்ஷீட் வாங்குவது எனது பொறுப்பு”என்று அடுத்த அறிவிப்பை வெளியிட்டார். அதை தயாரிப்பாளர் விஷாலும் ஏற்றுக்கொண்டார்.