நடிகர் திலகத்தின் குடும்பம் தேசிய பாரம்பரியம் சார்ந்தது.
சிவாஜி கணேசனின் தந்தை சின்னையா மன்றாயர் ஆங்கிலேய ஆட்சியின் ரயில்வேயில் அதிகாரியாக இருந்தார். பிரிட்டிஷ் ராணுவம் பயணித்த ரயிலை குனு வைத்துத் தகர்க்கும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் வெடிப்பதற்கு முன்னதாகவே கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் வாழ வேண்டியதாயிற்று. காங்கிரசில் இருந்த தீவிரவாதிகள் பக்கமாக இருந்தவர்.
வாஞ்சி நாதன், வ.உ.சி. இவர்களது பக்கமாக இருந்தவர். ஆனால் சிவாஜி தி.மு.க.வில் இருந்து பின்னர் பெருந்தலைவர் மீது இருந்த காதலினால் அந்தக் கட்சியில் இருந்தார். அந்த கட்சியின் உள்கட்சி சண்டையினால் ஐவரும் கடுமையாக பாதிக்கப்பட்டார். ஒரு சமயம் ஆர். வெங்கட் ராமனுக்காக தனது சொந்த செலவில் சென்னையில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்பட்டது. ஆனால் முதுகில்தான் குத்து விழுந்தது.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
தற்போது சிவாஜியின் முதல் மகன் தளபதி எனப்படும் ராம்குமார் மதுரையில் ரசிகர் மன்றத்தினர் மத்தியில் பேசிய பேச்சு அந்த குடும்பத்தினர் அரசியலுக்கு வரலாம் என்கிற என்னத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
“இதுவரை நாம் மற்றவர்களுக்காகத்தான் வாழ்க போட்டோம். அப்படியே பழகியும் விட்டது.விரைவில் நமக்கு நாமே வாழ்க என கூறும் காலம் வரலாம்” என்பதாக பேசி இருக்கிறார். வரப்போவது ராம்குமாரா,பிரபுவா?