இசைஞானி இளையராஜாவுக்கு இன்று வயது 75. கொண்டாடவேண்டிய இசைக் கலைஞர்கள் அமைப்பு ,திரை உலகம் மறந்து விட்டதால் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர்க் கல்லூரி இளையராஜாவைக் கொண்டாடியது.
இளையராஜா அவருக்கே உரிய பாணியில் அந்த விழாவில் பேசியது தற்போது பிரச்னை ஆகி இருக்கிறது.
“நான் சென்னைக்கு யாரை நம்பியும் வரவில்லை. கமல் ரஜினி போன்ற நடிகர்கள் இசைக்காக என்னைத் தேடி வந்தார்கள்” என்கிற உண்மையத்தான் சொன்னார். அவரது காலத்தில்தான் இசை மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்தது என்பதை மறக்க முடியாது. இன்றும் இரவில் இசைஞானியின் பாடல்கள்தான் தூக்க மருந்தாக இருக்கிறது.