“அது வேற வாயி! இது நாற வாயி!” என்று ஒரு படத்தில் வைகைப் புயல் வடிவேலு வசனம் பேசி இருப்பார்.
அது மாதிரி ஆகிப் போச்சு சின்மயி கதையும்.!
“13 வருஷங்களுக்கு முன்னாடி சுவிசில் வைத்து வைரமுத்து பாலியல் தாக்குதல் நடத்தினார் ,ஆனால் அதற்கு போதிய ஆதாரம் இல்லை என சின்மயியே புலம்பி “மீ டூ “இயக்கத்துக்கு ஆட்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இதே சின்மயி கவிஞர் வைரமுத்துக்கு 2014-ம் ஆண்டு பத்மபூஷன் வழங்கப்பட்டபோது “அடாடா ..வைரமுத்து சார் பாடல் வரிகளை சொல்லும்போது அதை கேட்பது சுகம், பிரிலியன்ட் என வரிகளைப் போட்டு புகழ்ந்தவர்தான் சின்மயி
“வாவ் ……வைரமுத்து சாருக்கு பத்மபூஷன் “என மெய் சிலிர்த்த சின்மயிக்கு என்ன நேர்ந்தது ?
நெட்டிஷன்கள் நெம்ப ஆரம்பித்து விட்டார்கள்.
