
பொதுவாகத் தமிழ்ச்சினிமாவில் எம்.ஆர். ராதா குடும்பம் என்றால் அது டெரர்தான்.
”துப்பாக்கியால் சுட்ட குடும்பம்யா” என பத்து ஸ்டெப் பேக் தான் ! ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி அந்த குடும்பம் சினிமாவில் ஸ்டெடி கோயிங்.!
‘மீ டூ’விலும் ரவியை சிலர் கோர்த்து விட வழக்கம்போல ராதாரவியும் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்.
“நடிகைன்னா தனி ரூம்லதான் மேக்கப் போட முடியும். நடுத் தெருவிலேயா மேக்கப் போடமுடியும்? ரூம்ல வச்சு மேக்கப் போடுறபோது தெரியாம அந்த ரூமுக்குள்ள டைரக்டர் வந்திட்டால் அந்தாளு கதை முடிஞ்சது. வந்தார் கிள்ளினார்னு நியூஸ் வந்திரும். இதெல்லாம் சினிமாவுக்கு கேடு!
ஷூட்டிங்ல ஹீரோ ஹீரோயினை கட்டிப் பிடிக்கிறாங்க. கிள்ளிக்கிறாங்க . அது ஒரு நியூஸ்?
துணை இயக்குனரா இருந்து படாதபாடு பட்டு கஷ்டப்பட்டு டைரக்டரா ஆகிறான்.அவன் மேல பழி பாவத்தைப் போட்டு தொல்லை பண்ணாதீங்க. ஒரு டைரக்டருக்கு படம் கிடைக்கிறதே தாவு தீர்ந்திடும் மேட்டர்.
எனக்கு 65 வயசு. இப்பத்தான் என்னைப் பத்தியே பேசறாங்க. ஒரு குக்கிராமத்தில முப்பது நாள் ஷூட்டிங். ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காம இருக்க முடியுமா?ஆனா இப்ப பேசிக்கவே பயப்படுறாங்க.
என் அப்பா, அண்ணன், நான் வில்லனா நடிச்சவங்க.நாங்க கெடுத்தால்தால் சரியா இருக்கும்னு மக்கள்நினைக்கிறாங்க.எங்களைப் பத்தி ஏதாவது செய்தி வந்தால் இருக்கலாம்பா வில்லனாச்சே என்கிறார்கள்.அவர் படத்திலேயே அப்படி நிஜத்தில கேட்கவா வேணும் என நம்புகிறார்கள்.அப்படி பெயர் வாங்கினவங்க. மீ டூ மந்திரிகளுக்குதான் .சினிமாக்காரங்களுக்கு இல்லை” என்கிறார் இளையவேள் ராதாரவி.!












