
சிரங்கு சொறிய,சொறிய சுகம். சொறிவதை நிறுத்தி விட்டால் ரணம்தான். அப்படி ஒரு ரணவேதனையை அனுபவிக்கவேண்டும் என்பது சின்மயியின் வேண்டுதலோ என்னவோ! மீ டூ பிரச்னை வழியாக வைரமுத்துவை டார்கெட் பண்ணினார்.ஆனால் எல்லாமே பூமராங் மாதிரி அவரிடமே திரும்பி வருகிறது என் செய்ய.?
சுவிஸ்சில்தான் தனக்கு வைரமுத்து நூல் விட்டார் என சின்மயி பாலியல் படலத்தைத் தொடங்கி வைத்தார்.
ஆனால் சுவிஸ் இசை விழாவின் அமைப்பாளர் இனியவன் தற்போது பூதாகரமாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
சின்மயியின் அம்மா ஒயின் அடித்து விட்டுப் போட்ட ரகளையினால் பெரும் பிரச்னை ஆகி விட்டது. பாடகர் மாணிக்க விநாயகம் பயந்துபோய் ஓடிவிட்டார். அந்தம்மா தற்போது எப்படியெல்லாம் மாறிப் பேசுகிறார்.”என்று வருத்தப்பட்டிருக்கிறார்.












