ஆந்திராவின் முக்கிய நடிகர்களை சந்திக்கு இழுத்து ,தானும் நிர்வாணமாகி போராட்டம் நடத்தியவர் ஸ்ரீ ரெட்டி. அப்படியே தமிழ்நாட்டு ஏஆர் முருகதாஸ், லாரன்ஸ் ஆகியோர் மீதும் படுக்கை விவகாரங்கள்.
ஆந்திராவில் திரை உலக சங்கம் எதுவும் ஆதரவு தராத நிலையில் சென்னைக்குக் கடையை மாற்றினார். அவரை வைத்து படம் எடுப்பதாக சிலர் அறிவித்தனர். லாரன்ஸையும் தற்போது சந்தித்துப் பேச அவரும் அடுத்தப்பட அறிவிப்பில் பெயரை சொல்வதாக சொல்லி இருக்கிறார். என்ன கேரக்டர் என்பதை லாரன்ஸ் சொல்லவில்லை.ஆனால் லாரன்ஸ் பெண்களுக்கு அளிக்கும் மரியாதை செமங்க! எந்தப் பெண்ணால் பாலியல் குற்றம் சாட்டப்பட்டாரோ அவருக்கு வாய்ப்பு வழங்குவது பெரிய மனிதத் தன்மை!
ஆந்திரா கைவிட்டால் என்ன சென்னை தெருவோர இட்லிக்கடைகளை ஸ்ரீ ரெட்டி ருசி பார்த்து வருகிறார். ஸ்டார் ஹோட்டல் தோசையை விட நம்மூரு தோசை ஸ்பெஷல் டேஸ்ட்டாம்!