“எனக்கு இது போன்ற ஒரு அனுபவம் இல்லை. நான் ஒருவருடன் டேட்டிங் செல்கிறேன் என்றால், எனக்கு அவனை பிடித்திருந்தது என்று அர்த்தம். அதே போன்று தான் அவனுக்கும் என்னை பிடித்திருக்கும்.” என்று நெற்றிப் பொட்டுவைக் குறி பார்த்து பிளந்திருக்கிறார் ஆண்ட்ரியா.
மீ டூ கூச்சல் யாரை நோக்கி யாரும் அபாண்டம் சொல்லலாம் என்றாகி விட்ட இந்த நிலையில் ஆண்ட்ரியாவின் அதிரடி பலருக்கு ஆச்சரியம் தரலாம்.
“ஒருவருடைய படுக்கையில் யார் இருக்கின்றார்கள், யார் இல்லை என்பதெல்லாம், இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விஷயம். படுக்கையை பகிர்வது ஆண்களது குற்றம் மட்டுமல்ல. ஆனால், இதில் நாம் மற்றவர்களை குற்றம் சாட்டுகிறோம். தங்களது வேலைக்காக பெண்கள் படுக்கையை பகிரவிரும்பவில்லை என்றால், யாரும் அவர்களை கேட்கமாட்டார்கள்” செத்தான்டி சேகரு என்கிற அளவுக்கு மண்டையைப் பிளந்திருக்கிறார் ஆண்ட்ரியா. ஒரு ஆம்பள கூட இவரளவுக்கு சொல்லவில்லை..
பெண்கள் முதலில் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படியிருந்தால், யாரும் அவர்களை நெருங்க முடியாது. தங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால், ஆண்கள் மட்டுமல்ல எல்லோரும் கிட்ட நெருங்கத்தான் செய்வார்கள்.” என்கிறார் ஆண்ட்ரியா