பாலிவுட்டை மட்டுமல்ல, கோலிவுட்டையும் படாத பாடு படுத்தி வரும் ‘மீ டூ’ இயக்க விவகாரத்தில், பிரபல கடம் வித்வான் உமாசங்கரும் சிக்கியுள்ளார். ஸ்ரீரெட்டி, சின்மயி,இவர்களைத் தொடர்ந்து, தற்போது குண்டு வீசியுள்ளவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனி.இவரது குண்டு வீச்சில் சிக்கியவர் தான் பிரபல கடம் வித்வான் உமாசங்கர். ஸ்ரீ ரஞ்சனி தனது டுவிட்டரில் வீசியுள்ள குண்டு இது தான்.’கடந்த 2010 ம் ஆண்டு தான் நான் முதன்முதலாக உமாசங்கரிடம் பேசினேன். அப்போது நான் ஆர்.ஜே.வாக இருந்தேன். அவர் என் எப்.எம். ஸ்டேஷனுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருநதார். அப்போது என் செல்போன் நம்பரை வாங்கி எனக்கு ஸ்வீட்டி என்பது போன்ற சில வார்த்தைகளை பயன்படுத்தி மெசேஜ் அனுப்பினார். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இந்நிலையில்,கிட்டதட்ட 7 ஆண்டுகள் கழித்து நான் டிஜிட்டல் மீடியா நிறுவனத்தில் வேலை செய்தபோது யூடியூப் சார்ந்தபுராஜெக்ட் தொடர்பாக உமாசங்கர் அங்கு வந்தார்.அவர் என்னை கடந்து சென்றபோது திடீரென என் இடுப்பில் கிள்ளினார். இச்சம்பவம் 15 பேர் முன்பு நடந்தது. இது தான் உண்மையான தொல்லை. சம்பவம் நடந்தபோது அங்கிருந்த ஆண்களும் என்னை போன்றே அதிர்ச்சி அடைந்தார்கள். அதில் இருந்து அவர் தொடர்பான புராஜெக்ட்களில் நான் வேலை செய்வதை தவிர்த்தேன். அதற்கு என் நிறுவனமும் சம்மதித்தது. ஆனால் அவர் கடவுள் பற்றியும், தான் ஒரு பக்திமான் என்றும் பேசுவது என்னை எரிச்சல் அடைய வைத்துள்ளது என்றும கூறியுள்ளார் ஸ்ரீ ரஞ்சனி. நெஞ்சம் மறப்பதில்லைதொடரில் நடித்து வரும் அமித் பார்கவின் மனைவி தான் ஸ்ரீ ரஞ்சனி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜான்விஜய் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்த மற்றொரு டுவிட்டில்,”ஒரு நிகழ்ச்சியை ஜான் விஜய்யை வைத்து எடுத்தோம், அன்று இரவு நான் அறை தூக்கத்தில் இருந்த போது போன் செய்தார். பின், என் நிகழ்ச்சி எப்போது என்று நீங்கள் கூறவே இல்லை என்றார், நான் நாளை கேட்டு சொல்கிறேன் என்றேன். ஆனாலும் விடாமல் பேசிய அவர் ஒருகட்டத்தில் செக்ஸ் பற்றி எல்லாம் பேசினார்.இதேபோல் தொடர ஒரு நாள் அவரது மனைவியிடம் கூறிவிடுவேன் என்று சொன்னதும் அவரின் டார்ச்சர் நின்றது என்றும் பதிவு செய்துள்ளார்.