
விஜய் சேதுபதி வயதான கெட்டப்பில் நடித்திருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய். படத்தின் தயாரிப்பாளரும் அவரே! முதன்முறையாக வசனமும் எழுதி, வசனகர்த்தாவாகவும் அறிமுகமாகும் விஜய் சேதுபதி. தனது நெருங்கிய நண்பரான பிஜு விஸ்வநாத்தையே இந்த படத்தை இயக்கவும் வைத்திருக்கிறார் ஒரு இதய நோயாளியை ஏற்றிக் கொண்டு செல்கிற ஆம்புலன்ஸ்… அதற்குள்ளிருக்கும் மூவர். இவர்களுக்குள் நடக்கும் கதைதான் ஆரஞ்சு மிட்டாய். சற்றே எட்டிப்பார்க்கும் தொப்பை,முகத்தில் தடிமனான கண்ணாடியுடன் ஐம்பதுகளை கடந்த வயோதிகம் என ஆளே உருமாறியிருந்தார் விஜய்சேதுபதி. படத்தைப்பற்றி ரொம்ப பில்டப் கொடுக்காத… இன்னா? என்று ஒரு விஜய் சேதுபதி, இன்னொரு விஜய் சேதுபதியை கலாய்க்கும் அருமையான டிரைலரும் எதோ இருக்குடா…என சொல்லவைக்கிறது.இப்படம் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது,
இந்த கேரக்டருக்காக தொப்பை தேவைப்பட்டுச்சு. ஏற்கனவே கொஞ்சம் இருந்தது. இன்னும் கொஞ்சம் உருவாக்கிக்கிட்டேன். மற்றபடி இந்த படத்தில் வரும் கெட்டப்புக்காக தினமும் இரண்டு மணி நேரம் மேக்கப் போட வேண்டியதா இருந்திச்சு. பதினொரு மணிக்குதான் ஷாட்ல வந்து நிற்க முடியும். நல்லவேளை… நானே தயாரிப்பாளர்ங்கறதால அதெல்லாம் தெரியல’ இந்த கதை எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கும் என்றவரிடம் ,உங்களுடன் சம காலத்தில் வந்த,. ‘சிவகார்த்திகேயன் கால்ஷீட் கிடைச்சா படம் தயாரிப்பீங்களா?’ எனக்கேட்டதும், ‘கண்டிப்பா பண்ணுவேன் சார். சந்தோஷமா பண்ணுவேன் அவர் கால்சீட் கொடுக்கணுமே! என்கிறார்