ஓர் அரசு செய்யவேண்டிய வேலையை ‘எழுமின் ‘ படம் செய்திருக்கிறது. நாளைய இந்தியாவின் சிற்பிகள் என மாணவர்களைப் பெருமையுடன் சொல்வார்கள். ஆனால் அந்த சிற்பிகளுக்காக ஏட்டளவில் மட்டுமே உதவிகள் இருக்கும். நடை முறையில் தடைகள் மட்டுமே இருக்கும் .இதை வெட்டவெளியில் நின்று உரத்த குரலில் சொல்லி இருக்கிறார்கள் வையம் மீடியாஸ்.
இறக்கிவிட்டு ஆழம் பார்க்கிறவர்கள் இருக்கிற திரை உலகில் ” கவலைப் படாதீர்கள் ,நானும் துணைக்கு இருக்கிறேன்” என சேர்ந்து உழைத்திருக்கிறார் சின்னக்கலைவாணர் விவேக்,
ஜனங்களின் கலைஞரான இவரும் இயக்குநர் வி.பி.விஜியும் சேர்ந்து மாணவர்களுக்கு துணை நிற்கும் வகையில் எழுமின் என்கிற படத்தை எடுத்திருக்கிறார்கள்.
தனுஷ் “எழடா மக்களே”என்கிற பாடலையும்,அனிருத் ‘போராடலாம்’ என்கிற பாடலையும் பாடிக் கொடுத்திருக்கிறார்கள். மகான் விவேகானந்தரின் ‘எழுமின்’ சொல்லை தலைப்பாக வைத்து இன்றைய இளைய சமுதாயத்துக்கு ஏது தேவையோ அதைப் படமாக தந்திருக்கிறார்கள்.
பாலியல் வன்முறை பள்ளிப் பெண்களையும் விட்டு வைக்கவில்லை என்பதை அன்றாட செய்திகளாகப் படிக்கிறோம். இந்த நிலையில் மாணவ, மாணவியர்க்கு தற்காப்புக் கலையின் அவசியத்தை ஆபாசமில்லாமல்,அருவெறுப்பு இல்லாமல் திரைப்படமாக தந்திருக்கிறார்கள்.
தொழிலதிபர் விசுவநாதன்( விவேக்.) மனைவி பாரதி (தேவயாணி.) ஆகியோரின் ஒரே மகன் அர்ஜுன்.( சுகேஷ்.) குத்துச்சண்டையில் கெட்டிக்காரன்.இவனது நண்பர்கள் பிரவின், ஸ்ரீ சித்,வினித், கிருத்திகா,சாரா ,ஆகியோர் தற்காப்புக் கலையில் ஆர்வம் உள்ளவர்கள். தற்காப்புக் கலைகள் கற்றுத்தரும் பயிற்சி நிலையம் நடத்துகிற அழகம் பெருமாள் காசேதான் கடவுளடா என்கிற கொள்கை உள்ளவர்.
குத்துச்சண்டையில் வெற்றி பெற்ற விவேக்கின் மகன் அர்ஜுன் எதிர்பாராமல் மரணம் அடைகிறான். மகனின் இழப்பினை ஈடு கட்ட தனியாக பயிற்சி நிலையம் நடத்துகிறார் விவேக்.
வில்லன் அழகம் பெருமாள், நாயகன் விவேக். இருவரது பயிற்சி நிலைய மாணவர்கள் பங்கு பெறுவதற்காக ஹைதராபாத் செல்கிற வழியில் முன்னாள் கோச் விவேக் பயிற்சி நிலைய மாணவ மாணவியரை கடத்த அவர்கள் எப்படி மீட்கப்படுகிறார்கள் என்பதுதான் சஸ்பென்ஸ்.
திறமையான திரைக்கதை, ஸ்ரீ காந்த் தேவாவின் பின்னணி இசை, கேமராமேன் கோபி ஜெகதீஸ்வரன் ஆகியோரின் துணையுடன் கதை பயணிக்கிறது. ஆதி காலத்து புறா விடு தூதுவை கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். அரசு விருது கொடுத்து கவுரவிக்க வேண்டிய நல்ல படம்.
வில்லன்