சமபலமோ அதீத பலமோ எதுவாக இருந்தாலும் அதை தலைக்கு கனமாக ஏற்றிக் கொள்வதில்லை சிலம்பரசன். “நான் திறமை சாலி, நீயும் திறமைசாலி என்றால் எதற்காக மோதவேண்டும்.அதை மக்கள் தீர்மானிப்பார்கள். எவன் திறமைசாலியோ அவனை மக்கள் ஏற்பார்கள். நமது மோதல் படங்களில் நடிப்பதில் மட்டுமே” என்பதில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவர் எஸ்.டிஆர். அந்த வகையில்தான் இன்று வெளியான தனுஷின் வடசென்னைப் படத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
“அன்புக்குரிய நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் ‘வடசென்னை’ படக்குழுவுக்கு என் சார்பாகவும் மற்றும் என் குடும்பம், ரசிகர்கள் சார்பாகவும் இதயம் நிறைந்த வாழ்த்துகள். திரையில் எங்களுடைய போட்டி தொடரும், சமூக வலைத்தளங்களில் அல்ல. என் ரசிகர்களும், என்னைப் பின்தொடர்பவர்களும் நல்ல படங்களை ஆதரிப்பார்கள். ‘வடசென்னை’ வெற்றிப்படமாக அமையும்.”என வாழ்த்தி இருக்கிறார்.
சிம்பு, தனுஷ் ரசிகர்கள் சண்டை போடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் சிம்புவின் அறிக்கை வெளியாகி உள்ளது. சிம்பு வெளியிட்டுள்ள வாழ்த்துக்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.