வேலி காத்தான் செடி கண்மாய்க் கரையுடன் மட்டும் நில்லாமல் கோவில் குளம் வரை பரவும் என்று எந்த கோனங்கியும் குறி சொல்லவில்லையே…! அடுத்த ஆளை மட்டும் குத்திக்காட்டிய சுட்டு விரல் நடிகையின் அப்பாவையே சுட்டுப் பொசுக்குகிறது ஐயா.!
பேப்பர் மேக்கிங் பாக்டரிக்கு சொந்தக்காரர் ஜட்டின் தாஸ்.நல்ல ஓவியரும் ஆவார். இவரின் மகள் நந்திதா தாஸ் இந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர். இவரின் நைனா மீதுதான் பாக்டரியில் வேலை பார்த்த பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருக்கிறார்.
“அப்பாவா இருந்தால் என்னங்க? எப்பவுமே மீ டூ வில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத்தான்! என்னைப் பலர் பல நேரங்களில் தவறான நோக்கம் இல்லாமல் தொட்டிருக்கலாம்.உண்மை என்றாவது ஒரு நாள் வெளிவரும்”என்கிறார் நந்திதா தாஸ்,