சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை சந்தித்துப் பேச சென்றிருக்கிறார். வாதப் பிரதிவாதங்கள் நடந்திருக்கின்றன. செயலாளர் கதிரேசன் தலையிட்டு அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
“டிரிபிள் ஏ பட ரிலீசுக்கு முன்னாடியே மூனரை கோடி சம்பளப் பாக்கியை வாங்கித் தரும்படி சொல்லியும் எங்களுக்கு வாங்கிக் கொடுக்காதது ஏன்?” என்பது சிம்புவின் அம்மாவின் கேள்வி,
“அச்சம் என்பது மடமையடா படத்தின் விலை 27 கோடிக்குப் போயிருந்தும் மைக்கேல்ராயப்பன் தனது படத்தை பதினெட்டு கோடிக்கு விற்க வேண்டிய அவசியம் என்ன?”என்றும் கேட்டிருக்கிறார்.
இதை எல்லாம் கேட்ட சங்க நிர்வாகிகளில் சிலர் சிம்புவின் பக்கம் நியாயம் இருப்பதாக கருதுகிறார்கள் என்கிறார்கள்.
நல்லது நடந்தால் சரி.!