மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை சரண்யா மோகன்.காதலுக்கு மரியாதை உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தவர். தொடர்ந்து, தமிழில் ‘யாரடி நீ மோகினி’, ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.சரண்யா மோகனுக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் டாக்டரான அரவிந்த் கிருஷ்ணன் என்பவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. செப்டம்பர் 6ம் தேதி கொட்டக்குழங்கராவில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்தனர்.இது பெற்றோர் நிச்சயித்த திருமணம் என்று சரண்யா மோகன் கூறியுள்ளார். ஆலப்புழாவில் நடனப் பள்ளி நடத்துகிறேன். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன். நடனப் பள்ளியிலும் பாடுவதிலும் கவனம் செலுத்துவேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.