புதை குழியில் இருந்து தானாகவே சவங்கள் எழுந்து யார் யாரையோ குற்றம் சாட்டுகின்றன.
சவங்கள் சொல்வது உண்மையாக இருக்குமா?
“மீ டூ ” வந்த பிறகு சாட்சியம் இல்லாத, ஆதாரமில்லாத அவதூறுகள் அடுத்தடுத்து சொல்லப்படுகின்றன.
சொல்வது பெண் என்பதால் உலகம் நம்பி விடுகிறது. தன்னை ஒருத்தன் கெடுத்து விட்டான் ,அல்லது படுக்கக்கூப்பிட்டான் என்று எந்த பெண்ணாவது வெளியில் சொல்வாளா?
ஆணின் பலவீனம் அவனுக்கு அத்தி மர ஆப்பு சொருகுகிறது.
‘விஷ்மயா’ ‘நிபுணன்’ என இரு மொழிகளில் படம் 2017-ல்!
அர்ஜுன் -ஸ்ருதி ஹரிகரன் என இருவர் நடித்திருக்கிற படம்.
படத்தில் இருவருக்கும் நெருக்கமான காட்சிக்கு ஒத்திகை. கணவன் மனைவியாக நடிப்பதால் நெருக்கம் தேவைப் பட்டிருக்கிறது.
“ஒத்திகையின் போது அர்ஜுனின் கை எனது கழுத்துக்கு கீழேயும் மேலேயும் போய் வந்தது. தொடக்கூடாத இடமெல்லாம் பட்டது. அப்படியே என் காதோரமாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வெளியில் தனியே வரச்சொன்னார் அர்ஜுன்.”என்று குற்றம் சொல்லியிருக்கிறார் ஸ்ருதிஹரிஹரன்
.இந்த குற்றச்சாட்டை அர்ஜுன் மறுத்திருக்கிறார். “இந்த குற்றச்சாட்டை மறுக்கிறேன். ஸ்ருதி ஹரிஹரன் பின்னணியில் வேறு ஆள் யாரோ இருக்கிறார்”என்று சொல்லி இருக்கிறார்.