தினம் தினம் மீ டூ வந்து அருவெறுப்புகளை பரப்பி விட்டுச் செல்லும் நிலையில் புதிதாக ஒன்றை சொல்லி இருக்கிறார் பாக்யராஜ். அதன் பெயர் ‘ஹெர் குளோசப்’ .சில ஒளிப்பதிவாளர்கள் பெண்களுக்கு மட்டும் அதிக கவனம் எடுத்து குளோசப் வைப்பார்களாம். அட கடவுளே !இது ஓர வஞ்சனை இல்லையா?
தொலைக்காட்சி நடத்திய பாட்டுப்போட்டியில்ஜெயித்த செந்திலை கதாநாயகனாக்கி ‘கரிமுகன்’ என்கிற திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பாக்யராஜ், சமுத்திரக்கனி,வசந்தபாலன், தயாரிப்பாளர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள்.
கதாநாயகனுக்கு போதிய லைட்டிங் சில காட்சிகளில் கொடுக்கப்படவில்லை என்பதை முன்னோட்டத்தில் பார்த்த பாக்யராஜ் தனக்கும் இப்படி நடந்திருக்கிறது என்பதை வேடிக்கையாக சொன்னார்.
“அசோக் குமார் என்கிற கேமராமேன் இருந்தார். அவரை ‘ஹெர் குளோசப்மேன்’ என்று சொல்வார்கள். அதாவது கதாநாயகிகளுக்கு மட்டும் குளோசப் வைப்பதில் அவ்வளவு சிரத்தை காட்டுவாராம். இது நமக்குத் தெரியாது.
நானும் ஊர்வசியும் வருகிற சீனில் ஊர்வசிக்கு மட்டும் லைட்டிங் பண்ணி விட்டு எனக்கு கம்மியாக வைத்து விட்டார். கேமரா அசிஸ்டென்ட் விஜயலட்சுமியை நான் கைக்குள் போட்டுக் கொண்டேன். அந்த பொண்ணு எனக்கு சரியாக லைட்டிங் வைத்ததைப் பார்த்த அசோக் குமார் ‘லைட்டை கட் பண்ணு என்று சொன்னதும் எனக்கு கோபம்.
“படம் எடுக்கிறது நான், டைரக்டர். ஹீரோ .இவ்வளவுமாக இருக்கிற எனக்கு லைட்டை கட் பண்ணிட்டு ஹீரோயினுக்கு மட்டும் எப்படி லைட்டிங் அதிகம் கொடுப்பிங்க என்று சண்டைக்குப் போய் விட்டேன். அவர் என்னவெல்லாமோ சொல்லி கடைசியில் சாரி சொல்லி விட்டார். இதெல்லாம் அனுபவத்தில்தான் செந்தில் கற்றுக் கொள்ளனும்.” என்று அட்வைஸ் பண்ணினார்.