மீடூ விவகாரம் தென்னிந்திய திரையுலகையே படாதபாடு படுத்தி வருகிறது. இந்நிலையில், கன்னட நடிகை சுருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது தனது முகநூல் பக்கத்தில் திடீர் பாலியல் குற்றசாட்டை கூறியுள்ளார் .இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜுனுடன், உடன் ‘விஸ்மயா’என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது என்னை கட்டிப்பிடிப்பது போல் ஒரு காட்சி இருந்தது.அப்போது அவர் என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்தார், அது பேட் டச் என்று எனக்கு அங்கேயே தெரிந்தது.ஆனால், அப்போது எங்களை சுற்றி 50 பேர் இருந்தார்கள், என்னால் அங்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை, மேலும், படப்பிடிப்பு முடிந்தும் என்னை பல முறை அவர் தனியாக பார்க்கும் படி அழைத்தார், ஆனால், அப்போது என்னால் இதை வெளியே தைரியமாக சொல்ல முடியவில்லை. என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்து நடிகர் அர்ஜுன் கூறியுள்ளதாவது, “நான் இதுவரை எந்தப் பெண்ணிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை. என்னைப் பற்றி யாரும் இப்படியான புகார் கூறியதும் இல்லை. நான் ஸ்ருதி குறிப்பிடும் அந்தப் படத்தில் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே நடித்தேன். அவரை நான் எங்கேயும் அழைத்ததில்லை. ஸ்ருதியின் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இப்படியான பொய் குற்றச்சாட்டுகளைப் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது. மீடூ இயக்கம் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்மீது அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ள ஸ்ருதி மீது வழக்கு தொடருவேன் என்கிறார் ஆவேசமாக.












