தேர்தல் நெருங்க நெருங்க ஆளும் கட்சிக்கு அடி வயிற்றில் அல்சர். எதிர்கட்சிகளோ அந்த அல்சரில் நெருப்பை வாரிக் கொட்டுகின்றன. போதாக்குறைக்கு கூட்டணி யாருடன் என்கிற வயிற்றுப் பசி.
எல்லாம் தமிழகத்தில் மிகையாகவே இருக்கிறது.
முதல்வர் எடப்பாடி மீது சிபிஐ விசாரணை. அதனால் ராஜினாமா செய் என்கிறது திமுக.
“அப்படியா சொல்லிவிட்டாய் .நீ எதிர்க்கட்சியாக இருப்பதற்கே தகுதி இல்லாத கட்சி ” என்று எடப்பாடி திருப்பி அடிக்கிறார்.
“சார் நீங்கள் காங்.கட்சியுடன் கூட்டணி என கேள்விப்பட்டோம் .நிஜமா சார் “என்று மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசனிடம் கேட்டால் “நான் அப்படி எதுவும் ராகுல்காந்தியுடன் பேசவில்லை..காங் கட்சியுடன் கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று இப்போது சொல்ல முடியாது’ என்கிறார்.
“சபரிமலை பிரச்னையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?”
“நான் ஐயப்பன் கோவிலுக்கு சென்றதில்லை.என்னிடம் கருத்துக் கேட்பது சரியாக இருக்காது,நான் நடுநிலையில் நின்று நாட்டுக்கு ஏது நல்லதோ, பெண்களுக்கு ஏது நல்லதோ அதைத்தான் சொல்லமுடியும்”
“உங்களை அதிமுக தலைமை அமைச்சர்கள் தொடர்ந்து விமர்சிப்பது என்?”
“பதற்றம் தான்!” என்கிறார் மக்கள் மைய்யத் தலைவர்.