உடுப்பி ஓட்டலில் மெனு போர்டில் இன்றைய ஸ்பெஷல் என தினமும் ஒரு அயிட்டத்தை எழுதி வைப்பார்கள். அதைப் போலாகி விட்டது ‘மீ டூ’ வும்! நேற்றைய ஸ்பெஷல் அர்ஜூன்.! இன்றைய ஸ்பெஷல் மம்பட்டியான் தியாகராஜன்.
தானுண்டு என்று ஏறத்தாழ ஒதுங்கியே வாழ்ந்ததைப் போல இருந்தவரை மணிரத்னம்தான் வானத்தில் காட்டினார். அவரை பிரதீபா மேனன் என்கிற பெண் புகைப்படக்காரர் சந்திக்கு இழுத்து வந்திருக்கிறார்.
கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியான ‘பொன்னர் சங்கர்’ வரலாற்றுப் படத்தை தியாகராஜன் இயக்கிய காலத்தில் நடந்ததாக சொல்லப்படுகிறது.
அதாவது தன்னிடம் தாய்லாந்து பெண்களின் புகைப்படங்களை தியாகராஜன் காட்டி அவர்களிடம் மசாஜ் செய்து கொண்டு உல்லாசமாக இருந்ததாக சொன்னார். எனது ஹோட்டல் அறைக்கு வந்து கதவைத் தட்டி தொல்லைகள் கொடுத்தார் என்பதாக அந்தப் பெண் சொல்லியிருக்கிறார்.