‘மீ டூ’ இயக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில்,திரையுலகமே திகைத்து போகும் அளவுக்கு பாலியல் குற்றசாட்டு புகார்கள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடியாக முக்கிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது.இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘திரைப்படம் மற்றும் நாடகம் உருவாகின்ற படப்பிடிப்பு தளங்களில் பாலின வேறுபாடின்றி கலைஞர்களுக்கு மனஅழுத்தமோ, அச்சுறுத்தலோ இன்றி சுதந்திரமாக சுயமரியாதையோடு தங்கள் கலையை செயல்படுத்தும் சூழலை தக்க வைத்துக் கொள்ளவும், பாதுகாக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாய் கவனம் மேற்கொள்ளும். அவ்வகையில் அதை செயல்படுத்தி கண்காணிக்க குழு ஒன்றையும் அமைக்கும் என்பதை தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.