* தியாகராஜனுக்கு ஆதரவு.!
*பார்ட்டிகளில் நடக்கும் வெட்கக்கேடு.!
*இருவர் சம்மதம் இல்லாமல் ‘அது’ நடப்பதில்லை.!
*ராதா ரவி எச்சரிக்கை.!
“தினமும் ஏதாவது ஒரு மீ டூ.! எங்கே நம்பர் ஒன் ஆர்ட்டிஸ்ட் பத்தி சொல்லிப் பாரேன்! பரஸ்பரம் சம்மதம் இல்லாமல் நடப்பதில்லை. இனியும் சும்மா இருக்க முடியாது. தியாகராஜன் போடுகிற வழக்குக்கு இந்த ராதாரவி பக்க பலமாக இருப்பான் “என்று அவருக்கே உரிய ஸ்டைலில் காமடி மிக்ஸ் சீரியஸ் என விளாசி விட்டார் ராதாரவி..
மம்பட்டியான் தியாகராஜன் கூட்டியிருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தன் மீது பாலியல் வன்முறை குற்றம் சாட்டியிருந்த பிரீத்தா மேனன் மீது மான நட்ட வழக்குத் தொடரப்போவதாக அறிவித்தார் தியாகராஜன்.
“அந்த பொண்ணு எங்கே இருக்குன்னே தெரியல. யாரோ தூண்டிவிட்டு இப்படி பொய்யா சொல்வதால் என்ன லாபம்னு தெரியல. ஆனா நான் சும்மா விட மாட்டேன் ” என்கிறார் . அடுத்துப் பேசிய ராதாரவி காமடி மணக்க மணக்க விளாசித் தள்ளிவிட்டார்.
“அது ஒரு குழந்தை. எவனோ தூண்டிவிட்டிருக்கான் .பாடிக்கிட்டு இருந்த பொண்ணு இப்ப பேசிக்கிட்டு இருக்கு,! பாவம் .! ஒவ்வொரு வீடா மாறிக்கிட்டு இருந்ததால பாஸ் போர்ட் தொலைஞ்சிருச்சாம். தேடுதாம்.
குழந்தை…அவசியமே இல்ல பாஸ் போர்ட் ஆபீஸ்ல மனுக் கொடுத்தால் நீ இன்னின்ன தேதியில இந்தந்த நாட்டில இருந்தேங்கிறத தெளிவா எடுத்துக் கொடுத்திருவாங்க.பாவம் எவன் தூண்டிவிட்டான்னு தெரியல ,இப்ப மாட்டிக்கிச்சு. இந்த போக்கை இப்படியே விட்டிங்கன்னா நாளைக்கு தயாரிப்பாளர்களும் மாட்டிக்குவாங்கன்னு எச்சரிக்க கடமைப் பட்டிருக்கேன். ஒப்பந்தம் போடும்போதே எங்கெல்லாம் தொடலாம் தொடக்கூடாதுங்கிறதுக்கு பட்டியல் போட்டுருங்க. கட்டிப் பிடிக்கலாமா எப்படி கட்டிப்பிடிக்கலாம் என்பதற்கும் விளக்கம் வாங்கிக்கங்க. அவங்க பெர்த்டே பார்ட்டி கலாச்சாரம்லாம் எப்படி இருக்கும்கிறதஎல்லாம் சொன்னால் ஜனங்க சிரிப்பாங்க” என சில செய்திகளை வெட்ட வெளிச்சமாக்கினார் ராதாரவி.