நடிகையைக் கடத்தி பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக நடிகர் திலீப் மற்றும் சிலர் மீது கேரளத்தில் வழக்கு நடந்து வருகிறது.கடத்தப்பட்டதாக சொல்லப்படும் பாவனாவுக்கும் கல்யாணம் நடந்து விட்டது.இந்நிலையில் கேரளா நடிகர் சங்கத்திலிருந்து (அம்மா.) நீக்கப்பட்ட திலீப்பை மோகன்லால் தலைமையிலான நடிகர் சங்கம் மீண்டும் சேர்த்துக் கொண்டது பற்றி ரேவதி, பார்வதி, உள்ளிட்ட பல நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
திலீப்பும் தற்போது நீக்கப்பட்டு விட்டார்.ஆனால் ?
“சமூக நீதிக்காக ,சக நடிகைக்காக போராடியது குற்றமா” என்கிற கண்டனக்குரல் எழுந்திருக்கிறது.
பூ போன்ற பார்வதி புயலாக வீசுகிறார்.
“கண்டித்தோம் என்பதற்காக கடந்த ஓராண்டாக வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. பாலியல் குற்றம் சாட்டுகிற நடிகைகளுக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் கொடுக்கிறார்கள்.
ஆனால் கேரளாவில் அப்படி இல்லை.
ஹீரோக்கள் கடவுள் மாதிரி மதிக்கப்படுகிறார்கள். சிலரது மன்றங்கள் குண்டர்கள் மன்றமாக மாறி இருக்கிறது.
எனக்கும் பல நடிகைகளுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன!” என குமுறி இருக்கிறார்.