உரத்துப் பேசினாலே ஒதுங்கிப் போய்விடுகிறவர் இசைப் புயல் ஏஆர்ரகுமான்.அதே நேரத்தில் நாட்டு நடப்பையும் ஆழ்ந்து கவனிப்பவர்.
எதற்கு கருத்துச் சொல்லவேண்டும், சொல்லக்கூடாது என்பதையும் அறிந்து கொள்ளக்கூடியவர். சினிமாவை நேசிப்பவர்.
பறவைக் காய்ச்சல் மாதிரி பரவுகிறது மீ டூ.!
இசைப்புயல் என்ன சொல்கிறார்?
“அந்த இயக்கத்தை கவனித்து வந்ததில் சிலரது பெயரைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியாக இருந்தது.சினிமாத் தொழில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிற துறையாகும். அழுக்குகள் நீக்கி சுத்தமாக வைத்துக் கொள்வது அனைவரது கடமையாகும். இது கிரியேட்டிவ் துறை. பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்”