குங்குமம் அக்கினி குழம்பாக மாறினால் என்ன ஆகும்?
நெருங்கினாலே வெப்பம் தாக்கியது.!
36 வயதாகி விட்டது ஷ்ரேயாவுக்கு.!
ருசிய நாட்டு ஸ்போர்ட்ஸ்மேன் ஆண்ட்ரி கொயச்செவ். இவரைத்தான் காதலித்து இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மற்ற நடிகை யரைப் போல கல்யாணம் முடிந்த பின்னர் குடும்ப வாழ்க்கையில் குதூகலமாக குளித்து குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. சினிமாவை விட்டு இடம் பெயர்வதாக இல்லை.
என்னதான் செய்வதாக உத்தேசம்?
“மிசர்ஸ் ஷ்ரேயா ஆண்ட்ரி கொயச்செவ் , உங்கள் கல்யாண வாழ்க்கை எப்படிப் போகுது?”
கேட்டதும் வந்தது பாருங்கள் கோபம்.!
“என் சொந்த வாழ்க்கையைப் பத்தி உங்களுக்கென்ன அக்கறை? அதென்ன விலைக்கு விக்கிற பொருளா? என் காதலைப் பற்றியோ, புருசனைப் பத்தியோ எதுவும் சொல்வதாக இல்லை. வேணும்னா என் சினிமாவைப் பத்தி கேளு?”என ஆவேசமாகி விட்டார்.
புத்தகமாக எழுதப்போகிறார் போலிருக்கு!