‘மலெ..மலெ…மருத மலெ..’பாடல் புகழ் மும்தாஜ் தற்போதுதான் ஆவேசமாகி இருக்கிறார். மீ டூ இயக்கத்தைப் ‘பாலோ’ பண்ணவில்லை என்பதாக சொன்னாலும் அவரையும் சில டைரக்டர்கள் விட்டு வைக்கவில்லை , சீண்டிப் பார்த்திருக்கிறார்கள் என தெரிகிறது.
“ஒரு டைரக்டர் தப்பா நினச்சு வந்தான். சிலிப்பர் அடி. செமத்தியா கொடுத்தேன்.”என்கிறார் மும்தாஜ். இன்னொரு டைரக்டரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினேன் என்பதாகவும் சொன்னார். அப்போதே நடிகர் சங்கத்திலும் புகார் செய்தேன். எனக்குப் பாதுகாப்பாக இருந்தார்கள்.”என்றும் சொன்னார்.