செம குத்து விழுந்திருக்கிறது சுசி .கணேசனுக்கு.!
இவரிடம் துணை இயக்குநராக இருந்த லீனா மணிமேகலை இயக்குநர் சுசி.கணேசன் மீது பாலியல் வன்முறை புகார் சொல்லி முன் மொழிந்திருந்தார்.
இதை இன்று நடிகை அமலாபால் வழி மொழிந்திருக்கிறார்.
மான நட்ட வழக்குப் போடுவதாக அறிவித்திருக்கிற சுசி.கணேசன் அடுத்து அமலாபாலுக்கும் சேர்த்து வழக்குத் தாக்கல் பண்ணுவாரா என்பது அவர் சொன்னால்தான் தெரியும்!
“பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத் தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குநராக என்ன பாடுபட்டு இருப்பார் ?
திருட்டுப்பயலே.2 பட நாயகியாக நான் இருந்திருந்தாலும் சுசியின் இரட்டை அர்த்த பேச்சு,முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள்,காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பக்குவம்,என பல வேறு சங்கடங்களை அனுபவித்திருக்கிறேன்.
இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டிருப்பார் என்பதை அறிய முடிகிறது. பொருளாதார நிலை, பெருகிவரும் வேலைக்கென்று வருகிற பெண்களின் தொகை ஒரு எளிய இரை ஆகிவிடுகிறது.
எல்லாத் துறைகளிலும் இந்த கொடுமை.
ஆன்மீகத்தையும் விட்டு வைக்க வில்லை”என்கிறார் அமலாபால்.