இந்தியாவிலேயே சிறந்த பொழுது போக்கு மாநிலம் தமிழ்நாடுதான்!அரசியல்,சினிமா இந்த இரு துறைகள் வழியாக பொதுமக்களால் அதிகளவில் சிரித்துக் கொள்ள முடிகிறது. காளி.என்.ரத்னம்,,கலைவாணர் ,கே.ஏ.தங்கவேலு ,கவுண்டமணி,வடிவேலு என காமடி மன்னர்கள் வாழ்ந்த பூமியில் சிரிப்புக்குப் பஞ்சமேது மக்களே!
நைசாக வம்புக்கு இழுத்து ஊமைக்குத்தாய் குத்துவதில் எல்லா ரசிக மன்றங்களுமே எக்ஸ்பெர்ட் தான்! இதில் மதுரைக் குசும்பர்கள் வல்லவர்கள். விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் திமுகவை கலாய்த்து அடித்துள்ள சுவரொட்டிகளைப் பாருங்கள்.