இன்றைய சமுதாயத்துக்கு என்ன தேவையோ அதைச்சொல்வதற்கு இயக்குநர் சுசீந்திரனுக்கு தயக்கமே வந்ததில்லை.
ஒரு ஜீனியஸ் பைத்தியம் பிடித்து அலைந்து கிளாஸ் உடைத்து, கடைசியில் ஒரு விலைமாதுவினால் ஞானம் பெறுவதுதான் கதை.
நன்றாகப் படித்து முன்னேறி வருகிற ஒரு மாணவனைப் பார்த்து பெருமைப்படாத அப்பா அம்மா இருக்க முடியுமா? ஆடுகளம் நரேன்,மீரா கிருஷ்ணன் இருவரது பிள்ளை ரோஷன். அதிகமாகப் படித்தால் மூளை கலங்கிவிடும் என்பார்களே,அதைப் போல் பெரிய கம்பெனியில் இந்த ஜீனியசிடம் முக்கியமான புராஜெக்டை கொடுத்து குறுகிய காலத்தில் முடிக்கச்சொல்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் மூளையினாலேயே தாக்குப் பிடிக்க முடியவில்லை.முடக்கிப் போட்டு விட்டது. ரோஷனின் நோயை தீர்க்க நவீன வைத்தியம் எதுவுமே பயன் படவில்லை. சிங்கம்புலியின் விபசார விடுதி தெரபிதான் உதவி செய்கிறது. இப்படி போகுதுங்க கதை.!
ரோஷன் அறிமுக நடிகர் மாதிரி தெரியவில்லை. காதலில் உருக வைக்காமல், அலைய விட்டிருக்கிறார்கள். நல்ல பிள்ளை பெயர் வாங்கும். கேரளவரவு பிரியாலால் இவரது ஜோடி. சில குளோசப்ஸ் ஒத்து வரல.
நரேன்,மீரா கிருஷ்ணன் இருவரும் கதையை நகர்த்தும் சக்திகள்.
வலுவில்லாத கதையை யுவன்,ஒளிப்பதிவாளர் குருதேவ்,ஆகிய பலவான்கள் தாங்கி இருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?