மீ டூ புகார்கள் திடீர் சுனாமியாக திரையுலக பிரபலங்களை நிலைகுலைய வைத்து கொண்டிருக்கும் வேளையில்,கர்நாடக இசை உலகிலும் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கர்நாடக இசைச் சங்கத்தின் முன்னணி இசைக்கலைஞர்கள் சிலர் மீது மீடூ ஹேஸ்டேக் மூலம் பாலியல் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் அச்சங்கத்தில் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், மெட்ராஸ் மியூசிக் அகாடமி,மீ டூ புகாரில் சிக்கிய , சித்ரவீணா என்.ரவிகிரண் உட்பட 7 கிளாசிக்கல் இசைக் கலைஞர்களை இந்த ஆண்டு டிசம்பர் (மார்கழி உற்சவத்தில் )சங்கீத சீசனில் கலந்து கொள்ள தடை செய்துள்ளது,ரவிகிரண், இவர் சங்கீத கலாநிதி விருது பெற்றவர். வாய்ப்பாட்டு கர்நாடக இசைக்கலைஞர் ஓ.எஸ்.தியாகராஜன், வயலின் கலைஞர் நாகை ஸ்ரீராம், மிருதங்க வாத்திய இசைக்கலைஞர்களான மன்னார்குடி ஏ.ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ், ஆர்.ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோர் மீ டூ புகார் அடிப்படையில் இந்த டிசம்பர் சீசனில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக கர்நாடக இசைச் சங்கத்தின் முன்னணி இசைக்கலைஞர்கள் சிலர் மீது மீடூ ஹேஸ்டேக் மூலம் பாலியல் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் அச்சங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.