காமடி நடிகர்களில் வடிவேலு,சந்தானத்துக்குக் கூட இப்படி ஒரு சான்ஸ் அடிச்சதில்லை. யோகிபாபுவுக்குத்தான் அதிர்ஷ்ட மழை அள்ளிக்கோ அள்ளிக்கோன்னு அடிக்கிது. முன்னரே நயன்தாராவிடம் காதலை சொல்லி முடிந்தாகிவிட்டது. நயனின் முன்னாள் காதலரான சிம்புவும் இந்த படத்தில் இருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்க.
தற்போது ஜோதிகாவிடம்.!
தனஞ்செயன் ,விக்ரம் குமார்,திருமதிலலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ள காற்றின் மொழி படத்தில் இயக்குநர் ராதா மோகன் அத்தகைய வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.
ரேடியோ ஜாக்கியாக நடித்திருக்கிறார் ஜோதிகா. இவரது குரலில் மயங்கிய யோகிபாபு காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். அவரை எப்படி ஜோ சமாளிக்கிறார் என்பதுதான் காமடி சைடு. படத்தின் முக்கிய காட்சிகளில் காமடியும் ஒன்று. ஏஆர் ரகுமானின் உறவு ஏ எச் ஹாசிப் இசை.