பிரபாஷ் கல்யாண அறிவிப்பு அவரது பிறந்த நாளில் அறிவிக்கப்படும் என்று சொன்னார்கள். பிறந்த நாளும் வந்து போய்விட்டது. அறிவிப்பு மட்டும் எந்த விமானத்தில் வரப்போகிறதோ தெரியவில்லை. பிரபாசுக்கும் வயது 39 ஆகி விட்டது.
இதே மாதிரி அனுஷ்காவும் கல்யாணத் தேதியை சொல்லாமல் தள்ளிக் கொண்டிருக்கிறார். இன்டஸ்ட்ரியில் இவர்கள் இருவரையும் காதலர்கள் என்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இருவருமே லவ்வர்சா அல்லது நண்பர்களா என்பதற்கு எந்தவொரு க்ளுவும் கொடுக்கவில்லை.
பிரபாஸ் வெளிநாட்டில் படப்பிடிப்பில்.
அனுஷ்கா எடை குறைப்பு பயிற்சியில் அமெரிக்காவில்.
பிரபாஷ்க்காக ஒரு டிசைனர் கடிகாரம் வடிவமைக்க சொல்லி இருக்கிறார் அனுஷ்கா.அவரது பிறந்த நாள் பரிசாக வழங்கப்போகிறாராம்.
சட்டுப்புட்டென்று விஷயத்தை உடையுங்க ஜோடிகளே!