“30, 40 வருடர்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கு முழுத்தகுதி ஆகிவிடாது.” “வெறும் ரசிகர் மன்றத்தை வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் புத்தி பேதலித்துவிட்டது என்றுதான் அர்த்தம்” இப்படி பல கருத்துகளை சொல்லி கடந்த 23-ம் தேதி மக்கள் மன்றத் தலைவர் ரஜினி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதற்கு இன்றைய அதிகாரப்பூர்வமான தி.மு.க .நாளேடு முரசொலியில் சிலந்தி என்கிற பெயரில் ரஜினியின் அறிக்கை விமர்சிக்கப்பட்டிருந்தது..”40 வருஷம் ரசிகனாக இருந்தவனுக்கு பதவி ஆசை இருக்கக்கூடாது. ஆனால் நடித்துக் கொண்டிருந்த உங்களுக்கு மட்டும் சி.எம்.ஆசை வரலாமாக்கும்?”என கேட்டிருந்தாராகள்.
அதற்கு மறு விமர்சனம் செய்யாமல், பதிலும் சொல்லாமல் ரஜினி இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
“நான் கடந்த 23-ம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளைச்சொல்லி இருந்தேன்.அது கசப்பாக இருந்தாலும் அதில் உள்ள உண்மைகளையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு பெருமைப்படுகிறேன்.என்னையும் உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது .நாம் எந்தப் பாதையில் போனாலும் அந்தப் பாதை நியாயமாகவே இருக்கும்” என கூறி இருக்கிறார்.
இதுநாள் வரை பட்டும் படாமலும் இருந்து வந்த திமுக.இன்று ரஜினியை கடுமையாக கிண்டல் செய்து கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களும் சரி, திமுகவில் இருக்கும் ரஜினியின் ஆதரவாளர்களும் இனியும் இணக்கமாக இருக்க முடியாது. தங்களது தலைமைக்கு விசுவாசம் காட்டவேண்டிய நேரம் வந்திருக்கிறது,