வசூலில் வாரி குவித்தப் படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா?’
‘ நீராடும் கண்கள் ஆகாய கங்கை,போராடும் உள்ளம் பாதாள கங்கை,சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல,வார்த்தைகள் இல்லை எண்ணங்கள் சொல்ல என காதலின் இனிமை,வலி கலந்து சொன்ன அந்த படத்தை இயக்கியவர் கவுதம் வாசுதேவ மேனன்.
மீண்டும் விண்ணைத் தாண்டி வரமாட்டாயா என ரசிகர்களை ,குறிப்பாக காதலர்களை ஏங்க வைத்திருந்தார்கள் சிம்புவும் திரிஷாவும்.!
விஜயசேதுபதி,திரிஷா நடித்து அண்மையில் வெளிவந்த 96 படம் வணிக ரீதியாகவும் விமர்சனங்கள் வழியாகவும் இன்றளவும் பேசப்படுகிற படம்.
செக்கச்சிவந்த வானம் சிம்புவின் உயரம் இன்னும் மேலே மேலே என சொல்லியது.
ஆகா,இத்தனை எதிர்பார்ப்பு உள்ள ஜோடியை மறுபடியும் விண்ணைத் தாண்ட வைத்தால் என்ன என்கிற எண்ணம் கணக்குப் போடத் தெரிந்தவர்களுக்கு கட்டாயம் வந்திருக்கும் .
வந்து விட்டது என்றுதான் தோன்றுகிறது. சிம்பு திரிஷா இணைந்துள்ள படத்தை திடீரென வெளியிட்டிருக்கிறார்கள். காரணம் இல்லாமல் இருக்குமா?
அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் வரும் வரை ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ள வேணாமே!