மதுரை மீனாட்சியம்மன் கோவில் மேலக் கோபுர வாசலில் நின்னு பாத்திருக்கீங்களா , சுகமான காத்து. வேட்டியையே தூக்கிரும், அப்படியே உள்ள போயி ஆடி வீதியில் படுத்தால் மாத்திரை சாப்பிடாமலேயே தூக்கம் சுகமா வரும். நல்ல கனவும் வரும்.சினிமா கதாசிரியர்கள் யாரவது படித்தால் என்னங்கிற ஏக்கமும் வரும்.
சரி ,ஜருகண்டி சினிமா பக்கமா வருவோம்.
ஜெய்க்கு டிராவல்ஸ் தொடங்க ஆசை. பாங்க்குக்குப் போனால் பத்துப் பதினைந்து பேப்பராவது கேட்பான் .கையெழுத்து போடனும். அதெல்லாம் எதுக்கு ? இளவரசுவிடம் போனால் சொத்தே இல்லாமல் பக்காவா டாக்குமென்ட் பண்ணி பணத்துக்கும் ரெடி பண்ணி கமிசனும் எடுத்துக்குவார். இப்படி இருட்டுல திரியிற திருட்டுக் கூட்டத்துக் கதை நமக்கு புதிசா என்ன?
ஜெய் -டேனியல் , ஜெய்- ரெபா இவர்களுடன் காரில் ரவுன்ட் அடித்துக் கொண்டே இருக்கிறோம் .! கதை ஓடுதோ இல்லியோ கார் ஓட்டம் அதிகம். 50 லட்சம் கடன் வாங்கி கார் கம்பெனி ஆரம்பித்த ஜெய்யை போலிஸ் அதிகாரி போஸ் வெங்கட் மடக்கி அவருக்கு பத்து லட்சம் மொய் எழுதச்சொல்கிறார். ஜெய் டேனியலுக்கென ஒரு கேனை யாராவது மாட்ட மாட்டார்களா?ரோபோ சங்கர் மாட்டுகிறார்.10 லட்சம் நான் தாரேன் .அந்த பொண்ணு ரெபாவை எனக்கு செட் பண்ணு என்று சொல்ல ஹீரோவும் கைத்தடியும் அதற்கும் தயார்.
இப்படி போகிற கதை அப்படித்தான் முடியும் என்கிற ரசிகனின் தீர்மானம் சரியாக இருக்கிறது.இயக்குநர் பிச்சுமணி காமடிக்கு முதலிடம் தந்து கதையை தள்ளிவிட்டார்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.பாஸ்கர், இசை அமைப்பாளர் போபோ இருவரும் எப்படியாவது கதையைக் காப்பாற்றவேண்டும் என்று கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
படத்துக்கு நம்ம மதிப்பு. 1/5