ஏடாகூடமான டைட்டில்களை வைத்தே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இசை அமைப்பாளர் ,நடிகர் விஜய் ஆண்டனி. இவருக்கு ஆந்திராவிலும் மார்க்கெட் இருக்கிறது. தனது தோற்றத்துக்குத் தகுந்த கதைகளைத் தேர்வு செய்து பின்னி எடுத்து வருவதால் தனக்கென ரசிகர்களை தக்க வைத்திருக்கிறார்.
இவரது ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளி ரிலீஸ். ‘அடிச்சுத் தூக்குவோம்’ என அட்வைஸ் பண்ணியவர் டி.சிவா.
‘தீபாவளி போட்டியில் படம் ரிலீஸ் ஆவது ஏன்?’
“குழந்தை பத்துமாதம்தான் தங்கும்.அதற்கு பிறகு ரிலீஸ் ஆகியே தீர வேண்டும். திமிரு பிடிச்சவன் நல்லா வளந்திட்டான் .அதான் ரிலீஸ் பண்றோம்” என்கிற விஜய் ஆண்டனி அடுத்து ‘ரொமான்ஸ்க்கும் ‘தயாராகிறார். டான்ஸ், லவ் இதற்கும் தயாராகி விட்டேன் ” என்கிறார்.
வாங்க சார் வாங்க.!