“ராகுல் காந்தி சென்னைக்கு வருகிறபோது நடிகர் திலகத்தின் அன்னை இல்லம் செல்கிறார். அங்கு அவருக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைகிறார் இளைய திலகம் பிரபு” என பின்னி எடுத்துக் கொண்டிருந்தது இணைப்புச் செய்தி.
வீட்டில் இருந்தார் பிரபு.
“தேர்தல் நேரத்தில் கட்சியில் சேருகிறீர்களே, முன்னமே முடிவு செய்ததா,அல்லது திடீர் திட்டமா?”என்றதும் அவருக்கே உரிய சிரிப்பு.
“என்னண்ணே..! நீங்களுமா? நமக்கெதுக்கு அரசியல்? அதெல்லாம் ஃபால்ஸ் நியூஸ்.எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை.”
கன்னத்தில் குழி விழுந்தது,!